ஈரான் உடனான மோதல் சூழலில் நேட்டோ (NATO) ராணுவக் கூட்டமைப்பு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அந்த அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது குறித்துத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பின் செயல்பாடுகள் குறித்துத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள அவர், சர்வதேச அரசியலில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்துப் பேசிய அதிபர் ட்ரம்ப், “நேட்டோ பார்ப்பதற்கு வலிமையான அமைப்பாகத் தோன்றினாலும், அது உண்மையில் ஒரு காகிதப் புலி. இந்த உண்மை ரஷ்ய அதிபர் புதினுக்கும் நன்றாகவே தெரியும். அந்த அமைப்பின் செயல்பாடுகளால் நான் ஒருபோதும் ஈர்க்கப்பட்டதில்லை” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நிதியுதவியால் இயங்கும் இந்த அமைப்பு, நெருக்கடியான நேரங்களில் அமெரிக்காவின் நலன்களுக்குக் கைகொடுக்கவில்லை என்பதே ட்ரம்ப்பின் இந்தத் தீவிர முடிவுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version