| மேஷம் | தன வரவு திருப்திகரமாக இருக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். |
| ரிஷபம் | தம்பதிகளிடையே அன்யோன்யம் கூடும். பிரிந்த நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். உத்தியோகத்தில் நல்ல பொறுப்பு கிடைக்கும். |
| மிதுனம் | உத்தியோகத்தில் அமைதியான சூழல் நிலவும். உடன்பிறப்புகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வரவுக்கேற்ற செலவுகள் உண்டு. |
| கடகம் | வீடு கட்டும் கனவு நனவாகும். மார்க்கெட்டிங் துறையினருக்குப் பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். வெளிநபர் தலையீட்டைத் தவிர்க்கவும். |
| சிம்மம் | தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். |
| கன்னி | வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவு கிடைக்கும். தம்பதிகளிடையே புரிதல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். |
| துலாம் | அண்டை வீட்டாரிடம் நட்பு பலப்படும். பெண்களின் சேமிப்பு உயரும். தேக ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை. |
| விருச்சிகம் | சந்திராஷ்டமம் இருப்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகள் மற்றும் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். |
| தனுசு | உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மற்றவர்களிடம் அன்பாகவும் தாராளமாகவும் நடந்து கொள்வீர்கள். வெற்றி நிச்சயம். |
| மகரம் | தொழிலில் புதிய பங்குதாரர்கள் இணைவார்கள். அடுத்தவர் நலன் கருதி எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிடைக்கும். புகழ் கூடும். |
| கும்பம் | நண்பர்களின் உதவியால் நன்மைகள் கிட்டும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வுக்கான வாய்ப்பு உண்டு. மகிழ்ச்சியான நாள். |
| மீனம் | தெய்வீகப் பயணங்களால் மன அமைதி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டு முயற்சிகளில் மாற்றம் காண்பீர்கள். |