ராசிபலன்கள்
மேஷம்செயல்களில் நிதானம் தேவை. வேலையில் அதிக கவனம் செலுத்தவும். சோம்பலைத் தவிர்த்து திட்டமிட்டுச் செயல்படுவது வெற்றி தரும்.
ரிஷபம்இன்று உங்களுக்குச் சில நல்ல செய்திகள் வந்து சேரும். பழைய முதலீடுகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பணப் பரிவர்த்தனைகளில் கவனம் தேவை.
மிதுனம்உற்சாகமான நாள். புதிய உத்திகள் தொழிலில் கைகொடுக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள்.
கடகம்மன நிம்மதி கிடைக்கும். நிதி தொடர்பான சிக்கல்கள் தீரும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும்.
சிம்மம்புதிய யோசனைகள் வெற்றி தரும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். கூட்டு வியாபாரத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்கவும்.
கன்னிபரபரப்பான நாளாக இருக்கும். பிறருக்கு உதவி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். வேலையில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
துலாம்சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது நிதானம் அவசியம்.
விருச்சிகம்துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும்.
தனுசுஉணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். சுபச் செய்திகள் வந்து சேரும்.
மகரம்பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். சட்ட ரீதியான சிக்கல்களில் உங்களுக்குச் சாதகமான முடிவு வரலாம்.
கும்பம்வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்அதிர்ஷ்டம் நிறைந்த நாள். வருமானம் உயரும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழல் நிலவும்.

இன்றைய நேரங்கள் (மதுரை/தமிழ்நாடு):

  • நல்ல நேரம்: காலை 6:30 – 7:30 | மாலை 4:30 – 5:30
  • ராகு காலம்: காலை 7:30 – 9:00
  • எமகண்டம்: காலை 10:30 – 12:00
  • குளிகை: மதியம் 1:30 – 3:00
  • சூலம்: கிழக்கு (பரிகாரம்: தயிர்)
Share.
Leave A Reply

Exit mobile version