சென்னையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய விலை நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.14,710 ஆக உள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்களின் தாக்கம் இந்திய சந்தையிலும் பிரதிபலித்து வருவதால் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து காணப்படுகின்றன. தங்கத்தின் இந்த குறைவு நகை வாங்க நினைப்பவர்களுக்கு சற்றே நிம்மதியை அளித்துள்ளது.

