சென்னை: 10-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2026) டி20 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ள நிலையில், 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (Chepauk Super Gillies) அணி தங்களது தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் அபிஷேக் தன்வர், நட்சத்திர விக்கெட் கீப்பர் என். ஜெகதீசன் உட்பட 11 முக்கிய வீரர்களை அந்த அணி தக்கவைத்துள்ளது.

அதே நேரத்தில், மூத்த வீரர்களான விஜய் சங்கர் மற்றும் பாபா அபராஜித் உள்ளிட்ட 9 வீரர்களை அணி நிர்வாகம் இந்த ஆண்டு விடுவித்துள்ளது (Release) குறிப்பிடத்தக்கது.

செய்தியின் விவரம்:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) நடத்தும் 10-வது டி.என்.பி.எல். டி20 தொடர் வரும் ஜூலை 31-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் (TNPL Auction) வரும் ஜூலை 3-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தங்களின் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன.

சேப்பாக் அணி தக்கவைத்துள்ள 11 வீரர்கள்:

  1. அபிஷேக் தன்வர் (Abhishek Tanwar)
  2. ஸ்வப்னில் சிங் (Swapnil Singh)
  3. என். ஜெகதீசன் (N. Jagadeesan)
  4. ஆர்.எஸ். மொகித் ஹரிகரன் (R.S. Mokit Hariharan)
  5. டி.டி. லோகேஷ் ராஜ் (T.D. Lokesh Raj)
  6. எம். சிலம்பரசன் (M. Silambarasan)
  7. கே. ஆஷிக் (K. Aashiq)
  8. ஜே. பிரேம்குமார் (J. Prem Kumar)
  9. எஸ். தினேஷ் ராஜ் (S. Dinesh Raj)
  10. ஜி. ராஜலிங்கம் (G. Rajalingam)
  11. என். சுனில் கிருஷ்ணா (N. Sunil Krishna)

முக்கிய வீரர்கள் விடுவிப்பு மற்றும் நிதி நிலை: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டனாக இருந்த பாபா அபராஜித், வரும் சீசனில் விளையாட விரும்பவில்லை எனத் தெரிவித்ததை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், ஐபிஎல் மற்றும் இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ஆல்-ரவுண்டர் விஜய் சங்கரையும் சேப்பாக் அணி ரிலீஸ் செய்துள்ளது.

11 வீரர்களைத் தக்கவைத்துள்ளதன் மூலம், ஜூலை 3-ல் நடக்கவுள்ள வீரர்கள் ஏலத்திற்குச் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியிடம் ரூ.24.03 லட்சம் கையிருப்புத் தொகை (Remaining Purse) உள்ளது. மொத்தமுள்ள 8 அணிகளும் சேர்த்து டி.என்.பி.எல் தொடருக்காக 103 வீரர்களைத் தக்கவைத்துள்ளன, 56 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட புதிய வீரர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்ய ஜூன் 25 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version