தஞ்சாவூர்:

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்தின் நீர் பாசன உத்திகள், வேளாண் ஆராய்ச்சி மையங்கள், பண்ணைகள் மற்றும் பாரம்பரிய இடங்களை மக்கள் நேரில் கண்டு அறிந்துகொள்ளும் வகையில் ‘அக்ரோ டூர்’ (Agro Tour) – பாசனம், வயல்கள், பண்ணைகள் மற்றும் பாரம்பரியம் நோக்கிய ஒரு நாள் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சிறப்புச் சுற்றுலா வரும் ஆகஸ்ட் 9, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 7:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை நடைபெறவுள்ளது.

📌 சுற்றுலாவின் முக்கிய சிறப்பம்சங்கள்:

  • பார்வையிடும் இடங்கள்: கல்லணை (Grand Anicut), தஞ்சாவூர் அருங்காட்சியகம், திருவையாறு வாழைப் பண்ணை, காட்டுத்தோட்டம் வேளாண் ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம், சூரக்கோட்டை நீர்வாழ் உயிரின வளர்ப்புப் பண்ணை, ஈச்சங்கோட்டை கால்நடைப் பண்ணை, மருங்குளம் தோட்டக்கலைப் பண்ணை, குறுங்குளம் சர்க்கரை ஆலை, NIFTEM-T மற்றும் உணவு அருங்காட்சியகம் உள்ளிட்ட 12 முக்கிய இடங்கள் இதில் அடங்கும்.
  • கட்டணம் & வசதிகள்: இச்சுற்றுலாவிற்கான கட்டணம் நபர் ஒருவருக்கு ₹1,750/- ஆகும். இதில் குளிர்சாதன பேருந்து வசதி (AC Bus), காலை மற்றும் மதிய உணவு, மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களின் வழிகாட்டுதல் ஆகியவை அடங்கும்.
  • முன்பதிவு விவரம்: குறைவான இடங்களே உள்ளதால், விருப்பமுள்ளவர்கள் +91 9489129765 என்ற எண்ணைத் தொடர்புகொண்டோ அல்லது விளம்பரத்தில் உள்ள QR குறியீட்டைச் ஸ்கேன் செய்தோ உடனடியாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.

Share.
Leave A Reply

Exit mobile version