விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘உயிர் – பட்டாசு தொழிலாளர் குடும்ப நலன் மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளை’ தொடக்க விழா மற்றும் கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. N.O. சுகபுத்ரா, IAS, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி கு. ஜெகதீஸ்வரி ஆகியோருடன் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. S.P. செல்வம், DCE., MLA கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கினார்.
📌 நலத்திட்ட உதவிகள் & முக்கிய விவரங்கள்:
- 🎒 83 மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள்: பட்டாசு வெடி விபத்துகளில் பெற்றோரை இழந்த 83 மாணவ-மாணவிகளுக்கு இலவசப் புத்தகப்பைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன.
- 🎓 உயர்கல்விக் கட்டணக் காசோலை: விருதுநகர் கல்வி அறக்கட்டளை மூலமாக 4 மாணவர்களின் உயர்கல்விக் கட்டணத்திற்காக ரூ. 18,864 மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டன.
- 🛡️ மறுவாழ்வு நோக்கம்: பட்டாசு விபத்துகளில் பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடும்பங்களின் குழந்தைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் வாழ்வாதாரத்திற்குத் துணைநின்று, அவர்களின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிப்பதே ‘உயிர்’ அறக்கட்டளையின் முதன்மை நோக்கமாகும்.
✨ பட்டாசுத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளித்து, அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஒளிமயமான பாதையை அமைத்துக் கொடுப்பதில் அரசு உறுதியோடு செயல்படுகிறது!


