வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், முன் எப்போதும் இல்லாத அளவிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ளார்!
- மாபெரும் நிதி ஒதுக்கீடு: சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.603.34 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- டன்னுக்கு ரூ.4,000 உறுதி: ஒன்றிய அரசின் நியாயமான விலைக்கு மேல், சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.709.50 வழங்கப்படுவதன் மூலம், கரும்பு விவசாயிகளுக்குக் குறைந்தபட்சம் டன் ஒன்றுக்கு ரூ.4,000/- கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- 90,000 விவசாயிகள் பயன்பாடு: 01.10.2025 முதல் 30.09.2026 வரை கரும்பு வழங்கிய தமிழ்நாடு முழுவதிலும் உள்ள சுமார் 90,000 கரும்பு விவசாயிகள் இதன் மூலம் நேரடியாகப் பயனடைவர்.
- தீபாவளிப் பரிசு: வரும் தீபாவளிப் பண்டிகை முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணப்பரிவர்த்தனை வாயிலாக இத்தொகை செலுத்தப்படவுள்ளது.
கரும்பு விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றியுள்ள தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு பற்றிய உங்களது கருத்துகளைப் பகிருங்கள்! 👇


