கூடுதல் அரசு வழக்கறிஞர் நியமனம் பரிந்துரை
பெற்றோருக்கு ₹5 லட்சம் இழப்பீடு உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் பகுதியில் +2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில், நீதிமன்றம் பல்வேறு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை
குற்றவாளிக்கு விரைவில் கடுமையான தண்டனை கிடைக்கச் செய்வதற்காக, கூடுதல் பெண்கள் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் போது கூடுதல் அரசு வழக்கறிஞரை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், குற்ற பின்னணி புலனாய்வு அடிப்படையில் கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இழப்பீடு மற்றும் பாதுகாப்பு
பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு ரூ.5 லட்சம் கூடுதல் இழப்பீடாக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க கிராமப்புறங்களில் காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

காவல்துறைக்கு கடும் எச்சரிக்கை
பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போனதாக புகார் வந்தவுடன் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதில் தவறும் காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேலதிகாரிகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version