📅 சேர்க்கைக்கான புதிய இறுதி நாள்:

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் 132 அரசு ITI-கள் மற்றும் 277 தனியார் ITI-களில் 2026–2027-ஆம் ஆண்டுக்கான கலந்தாய்வு 14.08.2026 உடன் நிறைவடைந்த நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நேரடிச் சேர்க்கைக்கான கால அவகாசம் 31.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

💼 வேலைவாய்ப்பு & தொழிற்பயிற்சியின் சிறப்பம்சங்கள்:

  • 📈 95% வேலைவாய்ப்பு: கடந்த ஆண்டுகளில் ITI-இல் பயிற்சி பெற்ற 95% பேருக்கு முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
  • 💰 மாதச் சம்பளம்: மாணவர்களின் திறனுக்கேற்ப குறைந்தபட்சம் ₹20,000 முதல் ₹30,000 வரை ஆரம்பச் சம்பளம்.
  • 🚀 நவீனப் பிரிவுகள்: ‘தொழில் 4.0’ (Industry 4.0) உள்ளிட்ட அதிநவீன தொழில் பிரிவுகளில் பயிற்சிகள்.
  • 🎓 மேற்படிப்பு வாய்ப்பு: 8-ஆம் வகுப்போ அல்லது 10-ஆம் வகுப்போ முடித்த மாணவர்கள் ITI பயிலும்போதே தமிழ், ஆங்கில தனித்தேர்வு எழுதி 10 / 12-ஆம் வகுப்பு சான்றிதழ்களைப் பெறலாம். மேலும், பாலிடெக்னிக்குகளில் 2-ஆம் ஆண்டு டிப்ளமோ படிப்பில் நேரடியாகச் சேரலாம்.

🎁 அரசு வழங்கும் இலவச சலுகைகள் & உதவித்தொகைகள்:

  • 🆓 பயிற்சிக் கட்டணம் இலவசம்
  • 💵 மாதாந்திர கல்வி உதவித்தொகை: ₹750/-
  • 🌟 தமிழ் புதல்வன் / புதுமைப்பெண் திட்டம்: அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்குக் கூடுதலாக ₹1,000/-
  • 🚲 இலவசப் பொருட்கள்: மிதிவண்டி, சீருடை, மூடு காலணிகள் (Shoes), பயிற்சிக் கருவிகள்
  • 🚌 இலவசப் பேருந்து வசதி & குறிப்பிட்ட நிலையங்களில் விடுதி வசதி

📲 சேர்க்கை முறை & தொடர்புக்கு:

விருப்பமுள்ள மாணவர்கள் கல்விச் சான்றிதழ்களுடன் தங்களுக்கு விருப்பமான ITI-க்கு நேரடியாகச் சென்று சேர்க்கை பெறலாம்.

  • 📞 அலைபேசி எண்: 9499055642
  • 💬 WhatsApp எண்: 9499055612

Share.
Leave A Reply

Exit mobile version