விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் சமூக நீதிக்காகப் பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திடப் பாடுபடும் சாதனையாளர்களிடமிருந்து ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2026’-க்கான பரிந்துரைகள் மற்றும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருதின் விவரம்:
- காசோலை: ₹5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம்)
- பதக்கம் & தகுதியுரை: ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்பெறும்.
- விருதாளர் தேர்வு: மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் விருதாளர் தேர்வு செய்யப்படுவார்.
தகுதி:
- சமூக நீதிக்காகப் பாடுபட்டு, மக்களின் வாழ்க்கைத் தரம் உயரக் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் பங்களிப்பு ஆற்றியிருக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவை:
- முழு சுயவிவரம் (Bio-Data), முகவரி & தொலைபேசி எண்
- சமூக நீதிக்காக ஆற்றிய பணிகள் குறித்த முழு விவரங்கள் மற்றும் அதற்கான ஆவணங்கள்/சான்றுகள்
முக்கியத் தேதி:
- விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 20.10.2026
சமூக நீதிக்காக உழைக்கும் தகுதியுடைய நபர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயன் பெறலாம்


