சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், தாய்மார்கள் மற்றும் சேமநலன் சார்ந்த மருத்துவத் துறைக்கு பல்வேறு சிறப்பான திட்டங்களும் நிதிக் ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களின் நலனுக்காக ‘தாய் கேர்’ (Thai Care) என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை அறிவிப்புகள்:

  • ‘தாய் கேர்’ மையங்கள்:
    • கருவுற்ற பெண்களுக்கான சிறப்பு சேவை மற்றும் உதவி மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பிரசவ காலம் நெருங்கும் வேளையில், கர்ப்பிணிப் பெண்கள் இந்த மையங்களில் தங்கிப் பயன்பெறலாம்.
    • இமையங்களில் தங்கும் பெண்களுக்கு கட்டணமில்லாமல் உணவு, தொடர் மருத்துவக் கண்காணிப்பு மற்றும் அவசர மருத்துவ உதவிகள் வழங்கப்படவுள்ளன.
    • இத்திட்டத்திற்காக ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்:
    • அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிக்கும் வகையிலும், தாய்மையைக் கொண்டாடும் விதமாகவும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • முதியோருக்கான நடமாடும் மருத்துவ மையங்கள்:
    • மூத்த குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் கட்டம் கட்டமாக 1,000 நடமாடும் geriatric (முதியோர்) மருத்துவ சிகிச்சை மையங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
    • ஒவ்வொரு நடமாடும் வாகனத்திலும் மருத்துவர், செவிலியர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் அடங்கிய சிறப்புக் குழுவினர் கிராம ஊராட்சிகள் தோறும் சென்று இலவச மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் நாள்பட்ட வியாதிகளுக்கான மருந்துகளை வழங்குவர். இத்திட்டத்திற்கு ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version