- தேசிய அளவில் சாதனை: அகில இந்திய தொழிற்தேர்வில் (All India Trade Test) தமிழ்நாடு ஐடிஐ மாணவர்கள் தேசிய அளவில் 60 முதலிடங்களைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் தமிழ்நாடு தேசிய அளவில் 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
- பிரிவு வாரியான முதலிடங்கள்: மொத்தமுள்ள 374 தேசிய முதலிடங்களில் தமிழ்நாட்டிற்கு 60 இடங்கள் கிடைத்துள்ளன. இதில் அரசு ஐடிஐ மாணவர்கள் 55 இடங்களையும், தனியார் ஐடிஐ மாணவர்கள் 5 இடங்களையும் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 40 முதலிடங்கள் பெறப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது 60 ஆக உயர்ந்துள்ளது.
- தேர்ச்சி விகிதம்: தேர்வில் பங்கேற்ற அரசு ஐடிஐ மாணவர்கள் 19,209 பேரில் 91.90% பேரும், தனியார் ஐடிஐ மாணவர்கள் 10,186 பேரில் 77.16% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- தமிழ்நாட்டின் பயிற்சி வாய்ப்புகள்: தமிழ்நாட்டில் தற்போது 132 அரசு ஐடிஐ-க்களும், 278 தனியார் ஐடிஐ-க்களும் செயல்பட்டு வருவதுடன், 70 பொறியியல் மற்றும் 34 பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் இந்த ஆண்டு சுமார் 46,000 பயிற்சியாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தரமான தொழிற்பயிற்சிக்குச் சான்றாக விளங்கும் நமது மாணவர்களின் இந்தச் சாதனையைத் தமிழ்நாடு அரசு பெருமையுடன் போற்றுகிறது! 🚀💪
#ITIStudents #AllIndiaTradeTest #SkillDevelopment #TNGovernment #TamilNaduAchievers #EmploymentTraining #TNDIPR


