2026 டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி குரூப் சுற்றிலேயே வெளியேறியது கிரிக்கெட் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தோல்வியை பின்னணியாகக் கொண்டு இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் முக்கிய கருத்து தெரிவித்துள்ளார்.
2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதியில் ஹர்திக் பாண்டியா அணியில் இருந்திருந்தால், இந்தியா அப்போது கோப்பையை கைப்பற்றியிருக்கும். ஆஸ்திரேலியா வெல்ல முடியாது” என்று கைஃப் குறிப்பிட்டுள்ளார்
2023 உலகக்கோப்பை லீக் போட்டியில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா இறுதிப்போட்டியில் விளையாடவில்லை. அதன்பிறகு ஆஸ்திரேலியாவின் ஐசிசி தொடர் செயல்பாடுகள் சரிவை சந்தித்துள்ளதாக கைஃப் சுட்டிக்காட்டினார். 2024 டி20 உலகக்கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய தொடர்களில் எதிர்பார்த்த நிலையை அவர்கள் எட்டவில்லை.
ஒரு காலத்தில் பலம் வாய்ந்த அணி என்று சொல்லப்பட்ட ஆஸ்திரேலியா தற்போது தடுமாறி வருகிறது” என கைஃப் கருத்து தெரிவித்துள்ளார்.

