கொழும்பு: சர்வதேசச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையிலும் இந்தியா உள்ளிட்ட 40 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு பைசா செலவில்லாத “இலவச விசா” (Free ETA) திட்டத்தை இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தியுள்ளது.

பைசா செலவில்லாமல் ஆன்லைன் விசா:

இலங்கை அரசின் இந்த புதிய பம்பர் ஆஃபர் திட்டத்தின்படி, சுற்றுலாப் பயணிகள் எவ்வித விசா கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்னதாக, இலங்கையின் அதிகாரப்பூர்வ ETA (Electronic Travel Authorization) இணையதளப் பக்கத்திற்குச் சென்று, எந்தவொரு கட்டணமும் இல்லாமல் ஆன்லைனிலேயே இலவசமாக விசா விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்.

30 நாட்கள் தங்கி மகிழலாம்:

இந்த இலவச ETA திட்டம் மூலம் விசா பெறும் சுற்றுலாப் பயணிகள், இலங்கையில் அதிகபட்சமாக 30 நாட்கள் வரை தங்கி, அங்குள்ள சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த அறிவிப்பு, குறிப்பாக கோடைக் விடுமுறை மற்றும் வார இறுதி நாள்களில் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிடும் இந்தியப் பயணிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க அதிரடி:

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அந்நாட்டின் சுற்றுலாத் துறை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அண்டை நாடான இந்தியாவில் இருந்து தான் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குச் செல்கின்றனர். எனவே, சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேலும் அதிகரிக்கவும், அதன் மூலம் நாட்டின் வருவாயைப் பெருக்கவும் இலங்கை அரசு இந்த அதிரடி இலவச விசா சலுகையை வழங்கியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version