மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘Spider-Man: Brand New Day’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெய்லரில், நண்பர்கள் மற்றும் MJ உட்பட அனைவராலும் மறக்கப்பட்ட நிலையில் வாழும் பீட்டர் பார்க்கர், தனது வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல்கள் மற்றும் போராட்டங்கள் முக்கியமாக காட்டப்பட்டுள்ளன. தனது சக்திகளை இழந்து தவிக்கும் ஸ்பைடர்மேன், மீண்டும் எழ முயலும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
மேலும், ப்ரூஸ் பேனர் (Hulk) உதவி உள்ளிட்ட பல சர்ப்ரைஸ் அம்சங்களும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளதால், இந்த படம் மார்வெல் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

