FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று தாயகம் திரும்பிய ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர்களுக்குத் தலைநகர் மாட்ரிட்டில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்த ஸ்பெயின் அணி, உலகக் கோப்பையுடன் தாயகம் திரும்பியது. தலைநகர் மாட்ரிட்டின் வீதிகளில் திறந்தவெளிப் பேருந்தில் அணிவகுத்து வந்த வீரர்களைக் காணச் சுமார் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு, தேசியக் கொடிகளை ஏந்தி ஆரவாரத்துடன் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நாட்டின் அரசர் மற்றும் பிரதமரைச் சந்தித்த பிறகு நடைபெற்ற இந்த பிரம்மாண்ட வெற்றிப் பேரணியில், வீரர்கள் உலகக் கோப்பையை ஏந்தி ரசிகர்களுடன் தங்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.


