துபாய் / லண்டன்:
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியே சரக்குக் கப்பல்களை இயக்க மாலுமிகளுக்கு 6 மடங்கு கூடுதல் ஊதியம் வழங்க சர்வதேசக் கப்பல் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் நீரிணையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதலால் கப்பல்கள் மீதான தாக்குதல் அபாயம் அதிகரித்துள்ளது. பல மாலுமிகள் இந்தப் பாதை வழியே பயணிக்கத் தயக்கம் காட்டி வரும் சூழலில், வணிகப் போக்குவரத்தைப் பாதிக்காமல் தொடர கப்பல் நிறுவனங்கள் இந்தத் தொகையை ஆபத்துக்கால கூடுதல் படியாக (Hazardous Area Bonus) அறிவித்துள்ளன.
அபாயம் நிறைந்த கடற்பகுதியைக் கடக்கும் மாலுமிகளுக்கு சம்பளத்துடன் சேர்த்து பெரும் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருப்பது, சர்வதேச வர்த்தக உலகிலும் மாலுமிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


