ஈரான் அனுமதியுடன் ஹார்முஸ் நீரிணையை கடந்து வந்த LPG கியாஸ் சரக்குக் கப்பலான ‘சிவாலிக்’, குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்துள்ளது. நாட்டில் LPG விநியோகத்தில் சிக்கல் நிலவி வரும் நிலையில், இந்த கப்பல் இந்தியாவை வந்தடைந்தது முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
சுமார் 45,000 மெட்ரிக் டன் LPG ஏற்றியிருந்த இந்த கப்பல், ஹார்முஸ் நீரிணை வழியாக பயணித்து இந்தியக் கடற்கரையை அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்தால் கடல்வழி போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், இந்த கப்பல் பாதுகாப்பாக வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் சமீப காலமாக LPG விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலை சமாளிக்க இந்த சரக்கு உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கப்பலில் கொண்டுவரப்பட்ட LPG, பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.

