இந்தியாவில் எரிபொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் முன்னணி தனியார் நிறுவனமான ஷெல் (Shell India), டீசல் மற்றும் பெட்ரோல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் விநியோகச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, டீசல் விலையை லிட்டருக்கு ரூ.25.01-ம், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.41-ம் உயர்த்தி அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த விலை உயர்வினைத் தொடர்ந்து, ஷெல் நிறுவனத்தின் விற்பனை நிலையங்களில் ஒரு லிட்டர் டீசல் ரூ.123.52 ஆகவும், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.119.85 ஆகவும் உயர்ந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் மற்றும் பிபிசிஎல் நிலையங்களை விட ஷெல் நிறுவனத்தில் விலை கணிசமாக அதிகரித்துள்ளதால், தனியார் பங்க்-களுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

