சென்னை: ‘அமரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் (RKFI) தயாரிப்பில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (மே 18) பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளது.
இத்திரைப்படத்திற்கு “சேயோன்” (SEYON) எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சிவகுமார் முருகேசன், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
கிராமத்துப் பின்னணியில் மாஸ் ஆக்ஷன்:
சமீபத்தில் வெளியான இப்படத்தின் அறிவிப்பு ப்ரோமோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்து மண் சார்ந்த கலாச்சாரம், இறை வழிபாடு மற்றும் ஆக்ஷன் பின்னணியில், சிவகார்த்திகேயன் இதுவரை இராத முற்றிலும் மாறுபட்ட கம்பீரமான தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.
பலத்த எதிர்பார்ப்பில்Cast & Crew:
இன்று முதல் முதல்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், படத்தின் முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன:
- நாயகி: தெலுங்குத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse) சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
- இசை: படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இவருடைய பின்னணி இசை படத்திற்குப் பெரும் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இதர நடிகர்கள்: பால சரவணன், அருள் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
RKFI மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து வழங்கும் இத்திரைப்படம், வரும் அக்டோபர் (2026) மாத தீபாவளி/ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. ‘சேயோன்’ படத்தின் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்!
– திரைச் செய்திப் பிரிவு


