சென்னை | அரசியல் செய்தி

குர்பானி (Qurbani) தொடர்பான விவகாரத்தில் அரசின் நடவடிக்கையை விமர்சித்து, த.வெ.க. அரசில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக உள்ள ஷாஜஹான் அவர்களிடம் முன்னாள் அமைச்சர் மற்றும் திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு. நாசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

🔹 போலீசை வைத்து குர்பானி நடத்த விடாமல் அடக்குமுறை செய்த போது, ஐ.யூ.எம்.எல். சார்பில் த.வெ.க. அரசில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருக்கும் மாண்புமிகு ஷாஜஹான் அவர்கள் எங்கே உறங்கிக் கொண்டிருந்தார்?

🔹 ஏன் முதலமைச்சரை உடனே சென்று சந்தித்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கூறவில்லை?

🔹 சிறுபான்மையினரின் மீது போலீஸ் அடக்குமுறையை கையாளுங்கள் என கோரவில்லை?

🔹 அமைச்சராக இருந்தும் குர்பானி தடுத்ததையும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகளையும் பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்காதது ஏன்?

🔹 எல்லாம் முடிந்த பிறகு இப்போது அல்லல் செய்கிறேன் என அமைச்சர் சொல்வதை அமைச்சர் மக்களுக்கு சகிக்க முடியுமா?

என திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆவடி சா.மு. நாசர் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

#DMK #AvadiNasar #Shajahan #QurbaniIssue #TamilNaduPolitics

Share.
Leave A Reply

Exit mobile version