சென்னை: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் தொடர் விலை உயர்வு காரணமாக, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டிலுள்ள சாமானிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் மாதப்பட்ஜெட்டைத் தீர்மானிப்பதில் எரிபொருள் விலை முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போதைய எரிபொருள் விலை உயர்வு என்பது வெறும் வாகன ஓட்டிகளை மட்டும் பாதிப்பதில்லை; மாறாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் இதுவே முக்கியக் காரணமாக அமைகிறது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், “போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதால் காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அன்றாடத் தேவைகளின் விலைகளும் உயர்ந்து, பொதுமக்களின் வாழ்வாதாரத்தை இது நேரடியாகப் பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு வரிக்குறைப்பு உள்ளிட்ட மாற்று வழிகள் மூலம் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version