தமிழ்நாட்டில் வணிக LPG சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அனைத்து உணவகங்களுக்கும் மின்சாரக் கட்டணத்தில் சலுகை வழங்கும் முடிவை மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ஹோட்டல் உரிமையாளர்கள் வரவேற்றுள்ளனர்.
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பல ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் தற்காலிகமாக மின் அடுப்புகளை பயன்படுத்த தொடங்கியுள்ளன. இதனால் மின்சார பயன்பாடு அதிகரித்துள்ள சூழலில், கூடுதல் நுகர்வுக்கு யூனிட்டுக்கு ரூ.2 வரை சலுகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்த சலுகை நடைமுறைக்கு வந்தால், வணிக சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டுள்ள சிரமங்களை சமாளிக்க உணவகங்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

