சீனாவில் நடைபெற்ற சீன பாரா பேட்மிண்டன் சர்வதேசப் போட்டி 2026-ல், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) வழிகாட்டுதலில் களம் கண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரா பேட்மிண்டன் வீரர்கள் இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் 6 பதக்கங்களை (1 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம்) வென்று மகத்தான சாதனை படைத்துள்ளனர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் வீரர்களின் இந்த சர்வதேசப் பதக்க வேட்டை உலகளவில் தமிழ்நாட்டின் விளையாட்டுத் திறனைப் பறைசாற்றியுள்ளது.
📌 பதக்கம் வென்ற தமிழகச் சாதனையாளர்கள் விவரம்:
- 🥇 தங்கப் பதக்கம் (Gold Medal):
- நவீன் சிவகுமார் – ஆடவர் ஒற்றையர் பிரிவு (SL4)
- 🥈 வெள்ளிப் பதக்கங்கள் (Silver Medals):
- நவீன் சிவகுமார் – ஆடவர் இரட்டையர் பிரிவு (SL3-SU5)
- நித்யா ஸ்ரீ – மகளிர் ஒற்றையர் பிரிவு (SH6)
- சிவராஜன் சோலைமலை – ஆடவர் இரட்டையர் பிரிவு (SH6)
- 🥉 வெண்கலப் பதக்கங்கள் (Bronze Medals):
- ஹாரிஸ் M.S – ஆடவர் ஒற்றையர் பிரிவு (WH2) & ஆண்கள் இரட்டையர் பிரிவு (WH2) (இரண்டு பிரிவுகளிலும் சாதனை!)
🏆 சர்வதேசத் திறமைகளை உருவாக்கி, உலகக் களத்தில் இந்தியாவின் வெற்றிக் கொடியை உயர்த்தும் தமிழ்நாடு அரசின் விளையாட்டுத் துறை ஊக்குவிப்புக்கு இச்சாதனை மற்றொரு சான்று!


