புதுடெல்லி:

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், கல்வித் துறை மற்றும் மாணவர் நலன் சார்ந்த விவகாரங்களில் மத்திய அரசின் போக்கைக் கண்டிக்கும் வகையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து வந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் “மாற்றம் விரும்பும் மாணவர்கள்” என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்கள் மற்றும் பதாகைகளை ஏந்தியபடி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் திரண்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள்:

“நாட்டின் எதிர்கால தூண்களான மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு கல்வி சார்ந்த பிரச்சனைகளுக்கும், தேர்வு குளறுபடிகளுக்கும் மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். மாற்றத்தை விரும்பும் மாணவர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து ஒலிப்போம்” எனத் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இந்த திடீர் கருப்புச் சட்டைப் போராட்டம் மற்றும் கோஷங்களால் நாடாளுமன்ற வளாகத்திலும், அவைக்குள்ளும் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

Share.
Leave A Reply

Exit mobile version