ஊட்டி: நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகப் பரவலாகத் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையுடன் கூடிய பலத்த சூறாவளிக் காற்றினால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வாழை மரங்கள் சேதம்: நீலகிரி மாவட்டத்தின் தாழ்வானப் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் பலத்த காற்றுடன் பெய்த மழையினால், அறுவடைக்குத் தயாராக இருந்த நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தங்களுக்கு, அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து மற்றும் மின் பாதிப்பு: கனமழை மற்றும் சூறாவளிக் காற்றின் காரணமாகப் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்துள்ளன. இதனால் முக்கியச் சாலைகளில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் சேதமடைந்து, பல கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

தகவலறிந்த மின்வாரிய ஊழியர்களும், தீயணைப்புத் துறையினரும் போர்க்கால அடிப்படையில் மரங்களை அகற்றி, மின் விநியோகத்தைச் சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version