சென்னை: மாணவர்களின் மனச்சுமையையும் புத்தகச் சுமையையும் குறைக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பாடத்திட்ட ஆலோசனைக்குழு கூட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் பேசிய அவர், “மாணவர்களின் மனச்சுமையைக் குறைக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படும். இனி பாடப்புத்தகங்கள் அதிகப் படங்கள் நிறைந்ததாக மாற்றப்படும். இதனால் புத்தகங்களின் சுமை குறையும்போது, இயல்பாகவே மாணவர்களின் மனச்சுமையும் குறையும்.

மேலும், வெறும் ஏட்டுக்கல்வியாக இல்லாமல், பண்பாட்டையும் பெற்றோரையும் மதித்துப் போற்றும் கல்வியாக இந்தப் புதிய பாடத்திட்டம் அமையும்” என்று பேசினார்.

Share.
Leave A Reply

Exit mobile version