4 விண்வெளி வீரர்களுடன் பயணம் தொடக்கம்
நிலவை சுற்றி வந்து பூமிக்கு திரும்பும் திட்டம்
50 ஆண்டுகளுக்குப் பிறகு, மனிதர்களை நிலவை நோக்கி அனுப்பும் முக்கிய முயற்சியாக நாசாவின் Artemis 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளது. இந்த பயணம், விண்வெளி ஆய்வில் புதிய கட்டத்தைத் தொடங்குவதாகக் கருதப்படுகிறது.
நிலவை சுற்றும் மனித பயணம்
4 விண்வெளி வீரர்களுடன் பயணிக்கும் Artemis 2, நிலவில் தரை இறங்காமல் அதைச் சுற்றி வந்து மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எதிர்கால திட்டங்களுக்கு அடித்தளம்
இந்த மிஷன், 2028ஆம் ஆண்டில் மனிதர்களை நிலவில் தரையிறக்குவதற்கான முன்னோட்டமாகவும், எதிர்காலத்தில் செவ்வாய் கிரகப் பயணங்களுக்கு அடித்தளமாகவும் அமையும் என நாசா தெரிவித்துள்ளது.

