முட்டையின் மஞ்சள் கரு குறித்து பலருக்கும் சந்தேகம் உள்ளது. பலர் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு, மஞ்சள் கருவை தவிர்க்கிறார்கள். காரணம் அதில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளது என்ற நம்பிக்கை.
ஆனால் மருத்துவர்கள் இதை ஒரு தவறான புரிதல் என கூறுகின்றனர். முட்டை என்பது முழுமையாக சாப்பிட வேண்டிய உணவாகும். மஞ்சள் கருவும், வெள்ளைக்கருவும் சேர்ந்ததே முழு முட்டை.
கொலஸ்ட்ரால் உண்மையில் ஆபத்தானதா?
முட்டையின் மஞ்சள் கரு குறித்து அதிகம் பேசப்படும் விஷயம் கொலஸ்ட்ரால். ஆனால் கொலஸ்ட்ரால் உடலுக்கு தேவையான ஒன்று. நமது கல்லீரல் கூட கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது.
கொலஸ்ட்ரால் செல்களின் சவ்வு உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரான் போன்ற ஹார்மோன்கள் உருவாகவும் இது அவசியம். வைட்டமின் D உருவாக்கத்திற்கும் கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது.
முட்டையின் மஞ்சள் கரு நன்மைகள்
முட்டையின் மஞ்சள் கரு நல்ல கொழுப்பு சத்துகளை வழங்குகிறது. இதில் வைட்டமின் D, வைட்டமின் E மற்றும் பல கனிமச்சத்துகள் உள்ளன. இதய நோயாளிகளும் தினமும் ஒரு முழு முட்டை சாப்பிடுவது பாதுகாப்பானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் அதிகம். ஆனால் மஞ்சள் கருவில் பல அத்தியாவசிய சத்துகள் உள்ளன. எனவே அதை நீக்குவது சத்துகளை இழப்பதற்கு சமம்.
ஏன் முழு முட்டை சாப்பிட வேண்டும்
முட்டையை முழுமையாக சாப்பிடும் போது உடலுக்கு நல்ல புரோட்டீன், நல்ல கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துகள் கிடைக்கின்றன. தேவையில்லாமல் பயந்து மஞ்சள் கருவை நீக்க தேவையில்லை.

