🏢 பள்ளிக் கல்வித் துறை (மானியக் கோரிக்கை: 2026-27)

“கல்வியின் வலுவான அடித்தளத்தை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அளிக்கும் வகையில், 414 பள்ளி ஆயத்தப் பயிற்சி மையங்களில் உள்ள 9,731 குழந்தைகள் பயன்பெறும் வகையில் நவீன கற்றல் மற்றும் சிகிச்சை உபகரணங்கள் ரூ.8.28 கோடியில் வழங்கப்படும்.”

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தி, அவர்களுக்கு வலுவான கல்வி அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதற்காகத் தமிழ்நாடு அரசு ENABLE (Empowering Needs, Abilities, Learning & Education) என்ற சிறப்பு முன்னெடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

📌 செய்தியின் முக்கிய அம்சங்கள் (Key Highlights):

  • 🌟 ‘ENABLE’ திட்டம்:ENABLE (Empowering Needs, Abilities, Learning & Education) திட்டத்தின் மூலம் மாற்றுத்திறன் மாணவர்களின் தனித்திறன்களை உயர்த்த சிறப்புச் கவனம் செலுத்தப்படும்.
  • 💰 நிதி ஒதுக்கீடு & கருவிகள்:நவீன கற்றல் மற்றும் சிகிச்சை உபகரணங்களை (Modern learning and therapeutic equipment) வழங்குவதற்காக ரூ. 8.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 🏫 பயனடையும் மையங்கள் & குழந்தைகள்:மாநிலத்தில் உள்ள 414 பள்ளி ஆயத்தப் பயிற்சி மையங்களில் பயிலும் 9,731 மாற்றுத்திறனாளி குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் நேரடியாகப் பயனடைவார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version