ஆங்கில நாளிதழுக்கு முதலமைச்சர் பேட்டி
கூட்டாட்சி தத்துவத்தில் உறுதியான நிலைப்பாடு
ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“200+ இடங்கள் எங்களுக்கே”
“திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்” என அவர் கூறினார்.
மாநில உரிமை குறித்து உறுதி
“மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி தத்துவத்தில் எந்தவித சமரசமும் இல்லை. எந்த அழுத்தத்துக்கும் தமிழ்நாடு ஒருபோதும் அடிபணியாது” என ஸ்டாலின் வலியுறுத்தினார்.
பாசிசத்திற்கு எதிரான போராட்டம்
“பாசிச சக்திகளுக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும்” எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த பேட்டி, தேர்தல் சூழலில் திமுகவின் அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.


