தாராபுரம்: தாராபுரம் ஏஜி சபையில் (AG Church) இன்று காலை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டு நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. அருண்ராஜ் அவர்கள் கலந்துகொண்டு இறைவழிபாடு செய்தார்.

இச்சிறப்பு வழிபாட்டு நிகழ்வில் கழகப் பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான மாண்புமிகு திரு. N. ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்) மற்றும் மாண்புமிகு அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோரும் இணைந்து பங்கேற்றனர்.

நிகழ்வின் முக்கிய அம்சங்கள்:

  • சிறப்பு வழிபாடு: ஏஜி சபை சார்பில் நடைபெற்ற பிரார்த்தனை மற்றும் சிறப்பு வழிபாட்டில் அமைச்சர்கள் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டனர்.
  • கோரிக்கை மனு அளிப்பு: நிகழ்வின் போது, தாராபுரம் ஏஜி சபையின் சார்பில் அதன் நிர்வாகிகள் சில முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அமைச்சர்களிடம் வழங்கி முறையிட்டனர்.
  • அமைச்சர்களின் உத்தரவாதம்: கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர்கள், அவற்றை அரசின் சார்பில் கனிவுடன் பரிசீலித்து உரிய நடவக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

இந்நிகழ்வில் ஏஜி சபையின் போதகர்கள், நிர்வாகிகள், சபை மக்கள், கூட்டணிக் கட்சி வேட்பாளர் மற்றும் கழக நிர்வாகிகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version