சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மாணவர்களிடையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தை உயர்த்தவும், தமிழ் இலக்கியங்கள் வெறும் மதிப்பெண்களுக்காக மட்டும் அல்லாமல் வாழ்வியலைச் செழுமைப்படுத்துவதற்கானது என்பதை உணர்த்தவும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் “இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை” திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்னையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் இன்று (25.09.2026) நடைபெற்ற சிறப்புப் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சியைப் பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் & கருத்துரைகள்:
- இளம்தமிழும் இளைய தலைமுறையும்: தமிழ்மாமணி மதுரை திரு. வெ. இராமகிருஷ்ணன் அவர்கள் தலைப்பில் உரை வீச்ச நிகழ்த்தினார்.
- வாழ்வியலும் இலக்கியமும்: வழக்கறிஞர் திரு. அ.க. ராஜாராமன் உரை நிகழ்த்தினார்.
- வெற்றிக்களம் கண்ட வீரத்தமிழ்ப்பெண்கள்: முனைவர் வே. ஸ்ரீலதா கருத்துரையாற்றினார்.
- தமிழ் இலக்கியத்தில் அடையாள மீட்டுருவாக்கம்: எழுத்தாளர் திரு. ஷாலின் மரிய லாரன்ஸ் உரையாற்றினார்.
- பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு (AI) சமூகம் அமைப்பது எப்படி?: திரு. சைபர் சிம்மன் வழிகாட்டினார்.
- சங்க காலத்தில் வாழ்வியல் கோட்பாடுகள்: திருமதி அனுகிரகா ஆதிபகவன் பயிற்றுவித்தார்.
பல்வேறு கல்லூரிகளில் இருந்து கலந்துகொண்ட 100 மாணவிகளுக்கு இந்த இலக்கிய மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசுச் செயலாளர் திரு. வே. ராஜாராமன் இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்


