சர்வதேச அளவில் நிலவி வரும் போர் பதற்றங்களால் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நிலவும் சூழலைச் சமாளிக்க மாநில அரசு அதிரடியாகக் களமிறங்கியுள்ளது. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து ஆலோசிக்க, அனைத்து ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.

அமைச்சர் தலைமையில் கூட்டம்: தமிழக உணவுத்துறை அமைச்சர் தலைமையில் நாளை இந்த முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் மாவட்ட ரீதியிலான உணவக சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு உணவு வழங்கலில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மாற்று வழிகள் என்ன? இந்தக் கூட்டத்தில், வழக்கமான சிலிண்டர்களுக்கு மாற்றாக மின்சார அடுப்புகள் (Induction), நீராவி சமையல் முறைகள் அல்லது குழாய் மூலம் எரிவாயு வழங்கும் (Piped Gas) திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. மேலும், இந்த நெருக்கடியான சூழலில் உணவு விலையை உயர்த்தாமல் இருக்க அரசு வழங்கக்கூடிய சலுகைகள் குறித்தும் முடிவெடுக்கப்பட வாய்ப்புள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version