மதுரை:

மதுரையில் MEDIGO Digital Health Private Limited நிறுவனத்தின் பிரத்யேக ‘MEDIGO’ டிஜிட்டல் சுகாதார செயலி, தவம் மருத்துவமனையில் நடைபெற்ற சிறப்பு விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

அமைச்சர் C.T.R. நிர்மல் குமார் அறிமுகம்

இந்நிகழ்வில் சிறப்பு முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ்நாடு மின்சாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் திரு. C.T.R. நிர்மல் குமார் அவர்கள், MEDIGO செயலியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

மேலும், விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட முன்னணி மருத்துவர்கள் டாக்டர் K.R. விஜயபாஸ்கர் மிதுன், டாக்டர் T. கபிலா ராஜீ, டாக்டர் M. திவ்யா மற்றும் டாக்டர் அமுதநிலவன் ராஜேஸ்வரன் ஆகியோர் தற்காலச் சூழலில் டிஜிட்டல் மருத்துவ சேவையின் அவசியத்தைப் பற்றிச் சிறப்புரையாற்றினர்.

ஒரே செயலியில் அனைத்து மருத்துவ சேவைகளும்!

நிகழ்ச்சியில் MEDIGO நிறுவனத்தின் நிறுவனர் திருமதி V. அனுஷா மற்றும் இணை நிறுவனர் திரு. G.V. முத்துக்குமார் ஆகியோர் நிறுவனத்தின் நோக்கம் குறித்துப் பேசுகையில், தமிழகம் முழுவதும் தரமான டிஜிட்டல் மருத்துவச் சேவையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இதன் முதன்மை நோக்கம் என விளக்கினர்.

இந்த ‘MEDIGO’ செயலி மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய சேவைகள்:

  • மருத்துவர் நேரமுன்பதிவு & ஆன்லைன் ஆலோசனைகள் (வீடியோ/ஆடியோ)
  • ஆய்வக பரிசோதனை முன்பதிவு & மருந்து ஹோம் டெலிவரி
  • ஆம்புலன்ஸ் மற்றும் ஹோம் நர்சிங் சேவைகள்
  • பாதுகாப்பான டிஜிட்டல் மருத்துவப் பதிவுகள் நிர்வாகம்

மருத்துவர்கள், தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்ட இந்த விழாவில், எளிய முறையில் மருத்துவ சேவைகளை வழங்கும் MEDIGO-வின் இந்த புதிய முயற்சிக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version