மஜக 10ஆம் ஆண்டு நிறைவு விழா முன்னிட்டு இன்று தலைமை செயற்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தலைமை நிர்வாகிகள், மாநில துணைச் செயலாளர்கள், மாநில அணி செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
திமுக கூட்டணியில் தொடரும் தீர்மானம்
மஜக 10ஆம் ஆண்டு நிறைவு விழா கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நீடிப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 234 தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.




நல்லகண்ணு பெயரில் நுழைவாயில்
இந்த செயற்குழு கூட்ட நுழைவாயிலுக்கு முதுபெரும் இடதுசாரி தலைவர் தோழர் ஐயா நல்லகண்ணு பெயர் சூட்டப்பட்டது. இது கட்சியினரிடையே கவனம் பெற்றது.
சென்னை மாநகரம் முழுவதும் கட்சியின் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. எக்மோர் பகுதிகளில் மஜக கொடிகள் அலங்கரித்தன.
இப்தார் நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீடு
இன்று மாலை அதே மஹாலில் “இதயங்களை இணைக்கும் இப்தார் நோன்பு துறப்பு” நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனுடன் மு.தமிமுன் அன்சாரியின் “சட்டசபையில் சமூக நீதி குரல்” நூல் வெளியீடும் நடைபெற உள்ளது.

