லெஜண்ட் சரவணன் படத்திற்கு குடும்ப ரசிகர்கள் ஆதரவு
வார இறுதி வசூல் உயர்வு – அடுத்த வாரம் சவால்

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் நடித்த ‘லீடர்’ படம் வெளியான முதல் மூன்று நாட்களிலேயே ₹25 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரசிகர்கள் வரவேற்பு
படத்தின் கதை, திரைக்கதை மற்றும் நடிகர்களின் நடிப்பு ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக குடும்ப ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல ஆதரவை பெற்றுள்ளது.

வெற்றிப் பாதையில் ‘லீடர்’
முதல் படம் ‘தி லெஜண்ட்’க்கு பின், இந்த படம் வணிக ரீதியாக நல்ல முன்னேற்றத்தை காட்டி வருகிறது. வார இறுதி நாட்களில் அதிகமான ரசிகர்கள் திரையரங்குகளை சென்றடைந்ததால் வசூல் உயர்ந்துள்ளது.

அடுத்த வாரம் சவால்
அடுத்த வாரம் வெளியாகும் ‘TN 2026’, ‘LIK’ போன்ற படங்கள் போட்டியை அதிகரிக்கலாம் என்றாலும், தொடர்ந்து நல்ல வசூல் கிடைக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது

Share.
Leave A Reply

Exit mobile version