“இஸ்ரேலின் அமெரிக்க லாபியின் அழுத்தம் காரணமாகவே ஈரான் போர் நடக்கிறது” என்று குற்றம்சாட்டி, அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

ஈரான் போருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர் இந்த முடிவை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கை மற்றும் மத்திய கிழக்கு நிலைமை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த ராஜினாமா சம்பவம் அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் பதற்றம் குறித்து உலக நாடுகள் கவலை வெளியிட்டு வரும் நிலையில், இந்த முடிவு கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது

Share.
Leave A Reply

Exit mobile version