சென்னை: JEE Main 2026 (Paper I – B.E./B.Tech) தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 13,04,653 பேர் தேர்வை எழுதிய நிலையில், 12 மாணவர்கள் 100 பர்சென்டைல் பெற்று சாதனை படைத்துள்ளனர். முடிவுகளை jeemain.nta.nic.in இணையதளத்தில் அறியலாம்.

தேர்வு விவரம்

  • விண்ணப்பித்தவர்கள்: 13,55,293
  • தேர்வு எழுதியவர்கள்: 13,04,653
  • தேர்வு நடைபெற்றது: ஜனவரி 21–28
  • இரண்டாம் தாள் (B.Arch/B.Planning) முடிவு: விரைவில்

இரண்டாம் கட்டத் தேர்வு முடிவுகள் வெளியான பின் இறுதி தரவரிசை அறிவிக்கப்படும்.

100 பர்சென்டைல் பெற்ற 12 மாணவர்கள்

மாநில வாரியாக 12 மாணவர்கள் 100 பர்சென்டைல் பெற்றுள்ளனர். டெல்லி, ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இந்த சாதனையை எட்டியுள்ளனர். இவர்களில் ஒருவர் OBC பிரிவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் அஜெய் பி என்ற மாணவர் முன்னிலை

மாநில அளவில் தமிழ்நாட்டில் அஜெய் பி 99.99 பர்சென்டைல் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். புதுச்சேரியில் கார்த்திகேயன் எச் 99.96 பர்சென்டைல் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

பிரிவு வாரியான சாதனைகள்

  • பொதுப்பிரிவு: 11 பேர் 100 பர்சென்டைல்
  • EWS பிரிவு: 99.99 பர்சென்டைல் (ராஜஸ்தான்)
  • OBC: ஆந்திரப் பிரதேச மாணவர் முன்னிலை
  • SC, மாற்றுத்திறனாளிகள் பிரிவிலும் மாநில வாரியாக முன்னிலை மாணவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்
  • மாணவிகள் பிரிவில் ஹரியானாவைச் சேர்ந்த ஆஷி கிரெவால் 99.99 பர்சென்டைல் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்
Share.
Leave A Reply

Exit mobile version