சென்னை: தமிழ்நாடு தொழில்நுட்ப மையமான iTNT ஹப் (iTNT Hub), சர்வதேசக் காப்புரிமை ஒப்பந்தம் (PCT) மற்றும் WIPO முன்முயற்சிகள் குறித்து இரண்டு நாட்கள் நடைபெறும் பிரத்யேக இணையவழிப் பயிற்சியை நடத்தவுள்ளது.
தொழில்முனைவோர்கள், ஸ்டார்ட்அப்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் காப்புரிமைத் துறை நிபுணர்களுக்கு உதவும் வகையில் இப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய தகவல்கள்:
- பயிற்சி நாட்கள்: அக்டோபர் 22 – 23, 2026 (மதியம் 1:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை)
- சிறப்பம்சங்கள்: WIPO நிபுணர்களிடம் நேரடிப் பயிற்சி, நேரலை ePCT பதிவு செயல்முறை விளக்கம் (Live Filing Demo) மற்றும் கலந்துரையாடல் நேரங்கள்.
- கற்றுத்தரப்படுபவை: சர்வதேச காப்புரிமை பாதுகாப்பு, ePCT தாக்கல் முறைகள், PATENTSCOPE, WIPO GREEN மற்றும் தொழில் நுட்ப வணிகமயமாக்கல்.
- சான்றிதழ்: இதில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மின்-சான்றிதழ் (E-Certificate) வழங்கப்படும்.
அறிவிப்பில் உள்ள QR குறியீட்டைப் பயன்படுத்தி கட்டணமின்றி இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.


