சென்னை: இசைஞானி இளையராஜா இசையமைப்பில் “தட்டுவண்டி” என்ற புதிய திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இந்தத் திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் வெகுவாக அதிகரித்துள்ளது. உணர்வுப்பூர்வமான பாடல்களுக்கும் மெய்சிலிர்க்க வைக்கும் பின்னணி இசைக்கும் பெயர் பெற்ற இளையராஜாவின் இசையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் உருவாகி வருகின்றன.
இப்படத்தின் நட்சத்திரப் பட்டாளம் மற்றும் இயக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


