வாஷிங்டன்: ஈரான் மீது இன்றிரவு மிகவும் சக்திவாய்ந்த மற்றும் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்பின் முக்கிய மையமாக விளங்கும் தீவைக் கைப்பற்ற அமெரிக்கா விரும்புவதாகத் தெரிவித்தார். எனினும், தற்போதைய சூழலில் ஈரானுடன் பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு விலக்கு: அமெரிக்காவின் இந்த ராணுவ நடவடிக்கை குறித்து டிரம்ப் மேலும் கூறுகையில், “ஈரான் மக்கள் பாதிப்படைவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே, ஈரானின் பொதுப் பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் (Power Plants) மீது தாக்குதல் நடத்த எங்களுக்கு விருப்பமில்லை. ஆனால், அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும்,” என்று எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், டிரம்பின் இந்த “இன்றிரவு தாக்குதல்” என்ற எச்சரிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடுமையான போர்க்குணமிக்க சூழலை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version