இந்தியாவில் நடைபெற்ற பயிற்சியை முடித்து திரும்பிய ஈரானிய போர்க் கப்பலை அமெரிக்கா தாக்கி மூழ்கடித்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் ராணுவத் தலைமை தளபதி அமீர் ஹடாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: “இந்தியாவில் பயிற்சியை முடித்துக் கொண்டு திரும்பிய எங்கள் கப்பலை தாக்கியது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி சந்திக்க வேண்டியது நிச்சயம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகள் கவனித்து வருகின்றன.

