ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா, தற்போது ஈரானுடன் நிலவி வரும் போர் சூழ்நிலையால் ரஷ்யாவிடமே எண்ணெய் வாங்குமாறு உலக நாடுகளிடம் கோரிக்கை விடுப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அவர் கூறுகையில், முன்பு ரஷ்ய எண்ணெய் வாங்குவதை எதிர்த்த அமெரிக்கா இப்போது உலக நாடுகளை ரஷ்யாவை நோக்கி திரும்பச் சொல்வது இரட்டை நிலைப்பாடு என விமர்சித்தார். தற்போதைய மத்திய கிழக்கு போர் சூழ்நிலை உலக எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சர்வதேச அரசியலில் நாடுகள் தங்கள் தேவைகளுக்கேற்ப நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வது உலக அமைதிக்கும் பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

