மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ப் பதற்றத்தின் பின்னணியில், துபாய் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் மூலம் துபாய் நகரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் ஈரான் இடையே நீடித்து வரும் மோதலின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக வளைகுடா பகுதிகளில் உள்ள முக்கிய விமானப்படை மற்றும் கடற்படை தளங்கள், துறைமுகங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலின் பின்னர் துபாய் உள்ளிட்ட வளைகுடா பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சில பகுதிகளில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் இந்த போர் பதற்றம் காரணமாக விமான சேவைகள், கடல்வழி போக்குவரத்து மற்றும் சர்வதேச வர்த்தகத்திலும் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

