சென்னை: நவீன கிரிக்கெட்டில் பேட்டிங்கிற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், பந்துவீச்சாளர்களின் உழைப்பு மதிக்கப்படுவதில்லை என்றும் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
அஸ்வின் கூறிய முக்கியக் கருத்துகள்:
- சரிவடையும் பந்துவீச்சின் தரம்:
- சமீபகாலங்களில் பந்துவீச்சின் தரம் சரிந்துள்ளது.
- தட்டையான ஆடுகளங்களை (Flat Pitches) தொடர்ந்து அமைத்துக் கொடுத்தால், எதிர்காலத்தில் யாரும் பந்துவீச்சாளராக வர விரும்ப மாட்டார்கள்.
- குழந்தைகளின் தேர்வு:
- அடுத்து கிரிக்கெட் விளையாட வரும் ஒரு குழந்தையிடம் பேட் அல்லது பந்தைக் கொடுத்தால், அது நிச்சயம் பேட்டைத் தான் தேர்ந்தெடுக்கும்.
- ஏனெனில் தொடர்ச்சியாகப் பேட்டிங்கைத் தான் ஹீரோ போலக் காட்டி வருகிறார்கள்; பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை.
- சுலபமான விமர்சனங்கள்:
- பந்துவீச்சாளர்களின் கஷ்டத்தைப் புரிந்து கொள்ளாமல் “என்ன சுலபமாக பவுலிங் போடுறாங்க” என மிக எளிதாக விமர்சனம் செய்துவிட்டுப் போய்விடுகிறார்கள்.
- பேட்களின் பிரத்யேகத் தயாரிப்பு:
- தற்போது உருவாக்கப்படும் பேட்களின் பிளேடு பகுதியானது, பந்து பட்டாலே தெரித்து ஓடுவது போலப் பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது.
- இதனால் ஒரு பந்துவீச்சாளர் எவ்வளவு நல்ல பந்தை வீசினாலும் கூட விக்கெட்டை வீழ்த்த முடிவதில்லை என அஸ்வின் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.


