தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு இன்று சென்னையில் ஆய்வு மேற்கொள்கிறது.
மாவட்ட வாரியாக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், வாக்குச்சாவடி அமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடைபெற உள்ளது.
மேலும், தேர்தல் நடைமுறைகள், விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தேர்தல் பணிகள் வெளிப்படைத்தன்மையுடனும், அமைதியான முறையிலும் நடைபெற உறுதி செய்யும் நோக்கில் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

