41 பொருட்களுக்கு ஜூன் 30 வரை வரி விலக்கு
பல்வேறு உற்பத்தித் துறைகளுக்கு நிவாரணம்
மத்திய கிழக்கில் நிலவும் போர்நிலை காரணமாக உருவாகும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில், 41 பெட்ரோ கெமிக்கல் பொருட்களுக்கான இறக்குமதி வரியை ஜூன் 30 வரை ரத்து செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
துறைகளுக்கு பெரும் பலன்
இந்த முடிவால் பிளாஸ்டிக், பேக்கேஜிங், ஜவுளி, மருந்துகள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் துறைகள் பெருமளவில் பயனடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி கட்டுப்பாடு நோக்கம்
இறக்குமதி வரி விலக்கு மூலம் உற்பத்தி செலவுகள் குறைய வாய்ப்புள்ளதால், நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உதவும் என அரசு விளக்கம் அளித்துள்ளது.


