அகமதாபாத்: இந்திய டி20 உலகக் கோப்பை அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா தொடர்ந்து இரண்டு போட்டிகளில் ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனது ரசிகர்களிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது. எனினும், அவரின் ஃபார்மை பற்றி அணி நிர்வாகம் கவலைப்படவில்லை என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதன்சு கோடக் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அபிஷேக் ரன் கணக்கைத் தொடங்க முடியாமல் வெளியேறினார். அதேசமயம், நமீபியா போட்டியில் உடல்நலக்குறைவால் பங்கேற்கவில்லை. இந்நிலையில் நெதர்லாந்து போட்டிக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த கோடக், “அபிஷேக் தெளிவான மனநிலையில் இருக்கிறார். டி20 வடிவத்தில் அதிரடியாக ஆடும் வீரர்களுக்கு ஆபத்து அதிகமாக இருக்கும். சில நேரங்களில் ஆரம்ப ஓவர்களிலேயே அவுட் ஆகுவது இயல்பானது” என்றார்.

மேலும், “அவரின் திட்டங்கள் தெளிவாக உள்ளன. டி20 கிரிக்கெட்டில் 10 பந்துகளில் 30 ரன்கள் எடுப்பதும் முக்கியம். சில தோல்விகள் காரணமாக அணுகுமுறையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. தேவையற்ற அழுத்தம் கொடுக்காமல் ஆதரவு அளிப்பதே முக்கியம்” என விளக்கமளித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version